×

கேரளாவில் கல்லறையில் படுத்த பயணி

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று  முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.  இதில் இத்தாலி, இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த தலா ஒரு பயணியும் அடங்குவர். இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரிசாட்டுகள், ஓட்டல்களில் அறை  கொடுக்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்  கோட்டயம் வந்த இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு யாரும் அறை  கொடுக்கவில்லை. பல ஓட்டல்கள் மற்றும் ரிசாட்டுகளுக்கு ஏறி இறங்கியும் பலன்  இல்லை. இது குறித்து அறிந்த கோட்டயம் போலீசார் உடனடியாக அவரை தேடும் பணியில்  இறங்கினர். நேற்று முன்தினம் காலை அவர் கோட்டயத்தில் உள்ள ஒரு கல்லறை  தோட்டத்தில் இருந்து செல்வதை சிலர் பார்த்தனர். அதன் பிறகுதான் அவர் இரவு  கல்லறை தோட்டத்தில் படுத்தது தெரியவந்தது.

கொரோனா பாதிப்பால்  கேரளாவில் அனைத்து தேர்வாணையத் தேர்வுகளும் ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மட்டும் தடை கவர்னருக்கு இல்லையா?: கேரளாவில் சர்வதேச சுற்றுலா  தலமான மூணாறு, பொன்முடி உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான்  தனது குடும்பத்தினருடன் சுற்றுலாத்தலமான பொன்முடி சென்றுள்ளார். அவருடன் 30  கவர்னர் மாளிகை ஊழியர்கள் சென்றுள்ளனர்.

Tags : Kerala ,cemetery , Kerala, cemetery, traveler
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு