×

வாட்சன், மன்சூர் அதிரடி அரை சதம் கிளேடியேட்டர்ஸ் வெற்றி

கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. பாகிஸ்தானில் நடந்து வரும் பிஎஸ்எல் டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளேடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த கராச்சி கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆஸம் 32, இப்திகார் அகமது 21, கேமரான் டெல்போர்ட் 62 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சாத்விக் வால்டன் 26 ரன் விளாசினர். குவெட்டா பந்துவீச்சில் நசீம் ஷா 2, சோகைல் கான், பவாத் அகமது, முகமது ஹஸ்னைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய குவெட்டா கிளேடியேட்டர்ஸ் 16.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து வென்றது. அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 66 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), குர்ரம் மன்சூர் 63 ரன் (40 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

ஷெஷாத், பென் கட்டிங் டக் அவுட்டாகினர். ஆஸம் கான் 12, முகமது நவாஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லீக் சுற்றில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் முல்தான் சுல்தான்ஸ் (14), கராச்சி கிங்ஸ் (11), லாகூர் கலந்தர்ஸ் (10) அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. பெஷாவர் ஸல்மி, குவெட்டா கிளேடியேட்டர்ஸ் தலா 9 புள்ளிகள் பெற்றதால், ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த பெஷாவர் அணி 4வது இடம் பிடித்து அரை இறுதி வாய்ப்பை வசப்படுத்தியது. குவெட்டா,
இஸ்லாமாபாத் யுனைட்டட் (7) அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. லாகூரில் நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் முல்தான் சுல்தான்ஸ் - பெஷாவர் ஸல்மி, கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.


Tags : Watson ,Mansur Action Half ,Gladiators Win ,Gladiators ,Mansour , Watson, Mansour, Gladiators, Win
× RELATED தொடர்ந்து படிக்கும் எம்மா வாட்சன்