×

கொரோனா பீதியால் டென்னிஸ் போட்டிகள் ரத்து

சென்னை: சென்னை பெருங்குடி கிருஷ்ணன் டென்னிஸ் மையத்தில்  இம்மாதம் 23ம் முதல்  28ம் தேதி வரை ‘ஏஐடிஏ டீச்சர்ஸ் கோப்பை’ டென்னிஸ் போட்டி நடைபெற இருந்தது. மொத்தம்  ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு கொண்ட இந்தப் போட்டி இப்போது கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்டள்ளது.

அதேபோல்  கிருஷ்ணன் டென்னிஸ் மையத்தில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப். 4ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ‘24வது ஆண்டு டர்போ எனர்ஜி’ டென்னிஸ் போட்டியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்த இருந்த  மேட்ச் பாயின்ட் நிர்வாகம்,‘கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  டென்னிஸ் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சூழலைப் பொறுத்து போட்டி நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Tennis matches ,Corona ,Dennis , Corona, Dennis, cancel
× RELATED கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.: பிரதமர் மோடி