×

ஏஜிஆர் கட்டணமாக 3,354 கோடி செலுத்தியது வோடபோன்

புதுடெல்லி: வோடபோன் ஐடியா நிறுவனம் ஏஜிஆர் கட்டணமாக அரசுக்கு மேலும் 3,354 கோடியை செலுத்தியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்படி,  வோடபோன் 53,038 கோடி, ஏர்டெல் 35,586 கோடி, டாடா டெலசர்வீசஸ் 13,823 கோடி செலுத்த வேண்டும். இதில் வோடபோன் ஐடியா 2 தவணைகளில் 3,500 கோடி செலுத்தியது. நேற்று 3,354 கோடி செலுத்தியது. இதுவரை ஏர்டெல் 18,004 கோடி, டாடா குழுமம் 4,197 கோடி செலுத்தியுள்ளன. இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த கட்டணத்தை 20 ஆண்டுக்கு தவணையில் செலுத்த மத்திய அரசு திட்டம் வகுத்தது. இதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு செய்துள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Vodafone ,AGR , AGR, 3,354 crore, Vodafone
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...