×

அதிகாரிகளின் ஆசியுடன் பணகுடி நீரோடைகளில் மணல் கடத்தல் ஜோர்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பணகுடி: பணகுடியில் இரவு நேரங்களில் நீரோடைகளில் மணல் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் குத்திரபாஞ்சான், களக்காடு செல்லும் சாலையில் உள்ள ஓடைகள், ராஜபுதூர் செல்லும் ஓடைகள், பணகுடி கன்னிமார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சில அதிகாரிகள் துணையுடன் மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் திருவிழா மற்றும் கொடைவிழக்களில் பாதுகாப்பு பணிக்கு ஒருசில நேர்மையான அதிகாரிகள் செல்லும் நிலையில் அவர் எந்த பகுதியில் பணியில் இருக்கிறார்? என அவருக்கு கீழ் பணிபுரியும் ஆட்கள் முலம் தெரிந்து கொண்டு அன்றைய இரவு முழுவதும் மணல் வேட்டை நடக்கிறது.

கடந்த மாதம் பணகுடியில் நடந்த 10 நாள் கோயில் திருவிழாவில் பணகுடி இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது பணியை தெரிந்த கொண்ட கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. என்னதான் நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் சில பண பேர் வழிகளால் மணல் கடத்தல் கும்பல் கை ஓங்கி நிற்பது பணகுடியில் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுத்தால் மட்டுமே பணகுடி பகுதியில் மணல் கடத்தலை நிறுத்தி கனிமவளத்தை பாதுகாக்க முடியும்.

Tags : Jour ,government , Cash Stream, Sand Trafficking, Jour
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...