×

கொரோனா ஒருவரை தாக்கினால் எத்தனை நாட்கள் அவரது உடலில் இருக்கும்? சீன மருத்துவர்கள் புதிய தகவல்

வூகான்: கொரோனா ஒருவரை தாக்கினால் எத்தனை நாட்கள் அவரது உடலில் இருக்கும்?, அதன் வீரியம் என்ன என்பது குறித்த புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.


Tags : doctors ,Chinese , Coronavirus, China, Doctors, Wuhan
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...