×

4வது முறையும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் : தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சர்வதேச நீதிமன்றத்தின் கதவை தட்டும் நிர்பயா குற்றவாளிகள்

ஹேக்: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகியோர் சார்பில் நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள  சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கலால் வரும் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.  

*டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு பஸ்சில் பயணம் செய்த 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதால் 2 வாரங்களுக்குப் பின் இறந்தார்.

*குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

*இவர்கள் ஒவ்வொருவராக மறுபரிசீலனை மனு, சீராய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என தாக்கல் செய்தனர். இதனால், இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

*பவன் குப்தா என்ற குற்றவாளி ஜனாதிபதிக்கு கடைசியாக அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. *இதையடுத்து, டெல்லி அரசு நேற்று விசாரணை நீதிமன்றத்தை அணுகி, குற்றவாளிகளுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால், அவர்களுக்கான தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கும்படி கோரியது.

*குற்றவாளிகள் தரப்பும் வக்கீலும், சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என கூறினார்.  இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கில் போடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இதையடுத்து தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

*மேற்கண்ட இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டார். 


Tags : International Court of Justice , Delhi, medical student, Nirbhaya, rape, murder, case, convicts, hanging, Mukesh Singh, convicted, Pawan Gupta, Vinay Sharma, Akshay Kumar
× RELATED காசாவில் உயிர்பலி, சேதங்களை...