×

சிஏஏ, என்பிஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவ்வாறு இருக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் , இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து பேசியிருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இஸ்லாமிய பிரமுகர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது, பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை இந்த அவை அறிய விரும்புகிறது என்றும் கூறினார். மேலும் தலைமைச் செயலாளர் அவர்களிடம் என்ன ஆலோசனை தெரிவித்தார் என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த மக்களும் அச்சத்தில் இருப்பதால் சிஏஏ குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


Tags : Stalin ,party party ,Insiders ,CAA ,NPR CAA ,Party Meeting ,NPR , Citizenship, Law Amendment, Stalin, Legislature
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...