×

3 முறை தள்ளிப்போன தூக்கு தண்டனை இம்முறையாவது நிறைவேற்றப்படுமா? : நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் மனு மீண்டும் தள்ளுபடி

டெல்லி:நிர்பயா வழக்கில் புதிதாக சீராய்வு மற்றும் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு பஸ்சில் பயணம் செய்த 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதால் 2 வாரங்களுக்குப் பின் இறந்தார்.

*குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

*இவர்கள் ஒவ்வொருவராக மறுபரிசீலனை மனு, சீராய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என தாக்கல் செய்தனர். இதனால், இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

*பவன் குப்தா என்ற குற்றவாளி ஜனாதிபதிக்கு கடைசியாக அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. *இதையடுத்து, டெல்லி அரசு நேற்று விசாரணை நீதிமன்றத்தை அணுகி, குற்றவாளிகளுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால், அவர்களுக்கான தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கும்படி கோரியது.

*குற்றவாளிகள் தரப்பும் வக்கீலும், சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என கூறினார்.  இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கில் போடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இதையடுத்து தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

*இந்த வழக்கில் முதலில் தங்களுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் Vrinda Grover, தன்னை வற்புறுத்தி முன்கூட்டியே கருணை மனுக்களை கையெழுத்து வாங்கியதாக மனுவில் முகேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டு காலம் வரை கருணை மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதாகவும் தனக்கு 2021ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளதாகவும் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

*மேற்கண்ட இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டார். 


Tags : Nirbhaya guilty Mukesh Singh , Delhi, medical student, Nirbhaya, rape, murder, case, convicts, hanging, Mukesh Singh, conviction
× RELATED நெட் தேர்வு ஒத்தி வைப்பு