×

கோடையில் பயணிகளை ஈர்க்க தென்னங் கீற்றால் குளு குளு ஆட்டோ: திருச்சியில் டிரைவரின் முயற்சி

திருச்சி: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. நூறு டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் நிலவுகிறது. இந்த கடும் வெயிலை சாமாளிக்க வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்றவற்றை பெரும்பாலோர் வாங்க துவங்கியுள்ளனர். அதேபோல் பழைய கார் மற்றும் வேன்களில் ஏசிக்களை பொருத்தி வெயிலை சமாளிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் ஆட்டோ டிரைவர் ஒருவர் குறைந்த செலவில் ஆட்டோவின் உள்பகுதியில் தென்னங்கீற்று அமைத்து ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கும் வெயிலின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபற்றி உறையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ்குமார் கூறியதாவது: கார், வேன்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏசி வசதிகள் இருக்கும். ஆனால், ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வெயிலை சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தன். அதற்காக கிராமங்களில் உள்ள தென்னங்கீற்று கூரை வீடு தான் மனதில் தான்றியது.

ஒரு கீற்று ரூ.7 வீதம் மொத்தம் 12 கீற்றுகள்தான் இதற்கு பயன்படுத்தினேன். கட்டுவதற்கு டேப் ரூ.70க்கு வாங்கினேன். இவ்வளவு தான் மொத்த செலவு ஆனது. நானும் எனது நண்பரும் சேர்ந்து எனது ஆட்டோவின் உள்பகுதியில் கீற்றுகளை அமைத்தோம். தற்போது வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளதை நன்றாக உணர்கிறோம். இதை முறையாக அவ்வப்போது துடைத்து சுத்தப்படுத்தினால் ஒன்றரை வருடம் வரை பயன்படுத்தலாம். செலவும் குறைவு என்பதால் இதை செய்வது அனைவருக்கும் எளிது. எனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் வெயில் தாக்கம் குறைவாக உள்ளதை என்னிடம் தெரிவித்தது என். இது ஒரு வகையான மன மகிழ்ச்சியை தருகிறது என்றார். இவரது பாணியை சக ஆட்டோ பயணிகளும் பின்பற்ற தயாராகி வருகின்றனர். கோடையை சமாளிக்கும் இவரது முயற்சியை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.



Tags : Klu Glu Auto: Driver's Effort ,Trichy Glu , Summer, Coconut, Auto, Trichy
× RELATED தென்தமிழகம், கேரளா உள்பட...