×

குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிடுங்கள்: கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கருத்து

அர்ஜென்டினா: சீனாவில் உருவாகி பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி தனிமைச்சிறையில் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  மெஸ்சி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்; ஒவ்வொருவருக்கும் இது சிக்கலான காலக்கட்டம். கொரோனா பரவலால் நாம் கவலை அடைந்துள்ளோம்.

உடல் ஆரோக்கியமே எப்போதும் முதலில் முக்கியம். இது ஒரு விதிவிலக்கான தருணம். நீங்கள் சுகாதார நிறுவனங்கள் மற்றும் பொது அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நாம் கொரோனாவை எதிர்த்து போராட முடியும். நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருங்கள். உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிட அற்புதமான வாய்ப்பு இது.

இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. தற்போதைய மோசமான சூழல் விரைவில் மாறும் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.


Tags : Lionel Messi , Family, footballer, Lionel Messi
× RELATED 8வது முறையாக மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது