×

ஐபிஎல் போட்டியை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்: சவுரவ் கங்குலி பேச்சு

மும்பை: ஐபிஎல் போட்டியை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி தனிமைச்சிறையில் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ், விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. கோவிட்-19 தாக்குதலால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் டி20 தொடர் இப்போதைக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி;  ஐபிஎஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கமளித்தார். ஐபிஎல் போட்டியை விட மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய முடிவுதான் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர்; கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கவனித்து வருவதாகவும், ஏப்ரல் 15-ம் தேதி போட்டிகள் தொடங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Tags : IPL ,Sourav Ganguly IPL Tournament ,Sourav Ganguly , IPL Tournament, People's Protection, Sourav Ganguly
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி