×

சுதந்திர இந்தியாவில் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு முதல் தூக்கு : 71 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20ல் தூக்கு

டெல்லி : சுதந்திர இந்தியாவில் முதலில் தூக்கில் போடப்பட்டது நாதுராம் கோட்சே மற்றும் நாராயண ஆப்தே ஆகியோர் தான். காந்தியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் ஹரியானா மாநில சிறையில் 71 ஆண்டுகளுக்கு முன்பு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போது நிர்பயா வழக்கில் ஒரே நேரத்தில் 4 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட உள்ளனர்.

*உலகில் 195 நாடுகளில் 104 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்பட 55 நாடுகளில் இன்னமும் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது.

*ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்புவரை தலையை வெட்டுதல், கழுதேற்றம் செய்தல் போன்றவை நமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மரண தண்டனை நிறைவேற்ற முறைகள்.

*அதற்கு பதிலாக தூக்கை அறிமுகம் செய்தது ஆங்கிலேயர்கள் தான். அவர்களது ஆட்சியை எதிர்த்த கட்டபொம்மன் உள்ளிட்ட ஏராளமானோர் தூக்கில் போடப்பட்டனர்.

*சுதந்திரத்திற்கு பின்னர், இந்தியாவில் முதலில் தூக்கிலிடப்பட்டவர் நாதுராம் கோட்சே. அவர் உள்ளிட்ட 9 பேர் காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

*கோட்சே, நாராயண ஆப்தே ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

*ஒருவர் அப்ரூவர் ஆனதால் விடுதலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

*அதன்படி கோட்சே, நாராயண ஆப்தே ஆகியோருக்கு ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1949ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தூக்கில் போடப்பட்டனர். அரை மணி நேரம் உடல்கள் தூக்கில் தொங்கிய பின்னர், மருத்துவர்கள் அவர்களது மரணத்தை உறுதி செய்தனர்.

*கோட்சே, நாராயண ஆப்தே ஆகியோரின் உடல்கள் அம்பாலா சிறை வளாகத்திலேயே எரியூட்டப்பட்டன. இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்படவில்லை என சர்ச்சைகள் எழுந்தன.


*கோட்சே தூக்கிலிடப்பட்ட போது, அம்பாலா சிறை வளாகத்திற்குள் தென் இந்தியர்கள் இருவர் அத்துமீறி நுழைந்ததும் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளாகும்.

*கோட்சே தூக்கிலிடப்பட்டு 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்றவாளிகள் 4 பேர் தூக்கிலிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Godse Who Shot Gandhi for First Execution: Independent India ,Godse ,Nirbhaya ,Gandhi ,India , Nathuram Gotche, Narayana Apte, Nirbhaya, Sex, Hang
× RELATED மோடிக்கு காந்தி தேசப்பிதா கோட்சே...