×

ஈரானில் பந்தர் காமர் பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

ஈரான்: ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம், ஈரானின் தெற்கு பகுதியான  பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ஈரானில் மிதமான தென் பகுதி மாகாணமான ஹர்மோசானில் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16 கிலோ மீட்டராக பதிவாகி உள்ளது  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,earthquake ,magnitude earthquake , 5.5 magnitude,earthquake,hits,Iran
× RELATED இந்திய எல்லையில் நிலநடுக்கம்