×

கொரோனா தாக்குதல் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: கடந்த 2 வாரங்களில் சென்செக்ஸ் 5,423 புள்ளிகள் சரிவு...பெரும் பதற்றத்தில் முதலீட்டாளர்கள்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று  வணிகம் தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,885 புள்ளிகள் குறைந்து 32,240 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  513 புள்ளிகள் குறைந்து 9,500 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 5,423 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. கடந்த மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில்  சென்செக்ஸ் 37,577 புள்ளிகளாக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை  இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போது, 1,885 புள்ளிகள் சரிந்து முதலீட்டார்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : stock market crashes ,Indian ,attack ,Corona ,Sensex , Indian stock market crashes due to Corona attack: Sensex plunges 5,423 points in last 2 weeks ...
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...