×

விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை போதாது: டாக்டர் ராமலிங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்

கடந்த 15 வருடத்துக்கு முன்னர் சார்ஸ் வைரஸ் வந்தது. அந்த வைரஸ் குடும்பம் தான் இந்த கொரோனா. இந்த வைரஸ் மரபனு மாறும் போது அந்த வீரிய தன்மை மாற்றி விடும். சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தி, பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதம் பேருக்கு பிரச்னையே கிடையாது. இந்த வைரஸ் பாதிப்பில் 3 சதவீதம் பேர் தான் அதிக தாக்குதல் ஏற்பட்டு அதில் இறப்பு ஏற்படுகிறது.
இந்த உயிரிழப்பு ஜலதோஷத்தால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா என்கிற வியாதி உண்டு பண்ணி மூச்சு திணறல் அதிகமாகி இறப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் தும்மல், இருமும் போது காற்று வழியாக 1 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணிக்கிறது. அதை தாண்டி அந்த வைரஸ் தாண்ட முடியாது. தும்மல், இருமல் எச்சிலில் இருந்து வருகிற துளி மெட்டலில் போய் பட்டது என்றால் 12 மணி நேரம் அந்த வைரஸ் உயிரோடு இருக்கும். துணியில் பட்டது என்றால் 6 மணி நேரம் தான் உயிரோடு இருக்கும். ஒரு அறையில் நான்கைந்து பேர் இருந்தால், அதில் ஒருவர் இருமினால் உடனடியாக பாதிப்பு ஏற்படும்.

ஒருவர் வெறுங்கையில் இருமும் போது, அவர்கள் கதவில் இருக்க கூடிய கைப்பிடியை பிடிக்கும் போது, அந்த வைரஸ் சில நேரமும் உயிரோடு இருக்கும். அப்போது இன்னொருவர் அந்த கைப்பிடியை பிடிக்கும் போது, அவருக்கு அந்த வைரஸ் பரவுகிறது. அவர் மூக்கிலோ, வாயிலோ கை வைக்கும் போது, அவருக்கு தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் நமது நாட்டில் எளிதாக தொற்றி விடுவது அதிகம். காரணம், எப்போதெல்லாம் கூட்டம் கூடும் போது அந்த வைரஸ் எளிதாக பரவி விடும். சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் போது, விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வருகிறவர்களை மட்டும் கடந்த மாதம் ஸ்கிரீன் செய்யப்பட்டனர். அவர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களை மட்டும் கண்காணித்தனர். வுகான் என்கிற மாகாணத்தில் இருந்து நேரடியாக 2 மாணவர்கள் இங்கு வந்தனர். அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு அறிகுறி இல்லை என்பது தெரிந்தது.
 ஆனால், சீனாவில் இருந்து அந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி விட்டது. ஆனால், மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களை சோதனை செய்யவில்லை.

முதலில் சீனாவில் இருந்து வருபவர்களை மட்டுமே நாம் சோதித்தோம். கடந்த சில நாட்களாக தான் ஐரோப்பிய கண்டம் உட்பட மற்ற இடங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம். எல்லோரையும் ஸ்கிரீன் செய்யும் நிலைப்பாட்டை முன்கூட்டியே எடுத்து இருக்கலாம். இப்படி விமானம் மூலம் வரும் நோயாளி காய்ச்சல் சோதனை செய்யும் போது அவர்களை பரிசோதனை ெசய்து அவர்களுக்கு அறிகுறியை கண்டறிவது கடினம். எனவே அவர்களை நோய் இல்லை எனக்கூறி விட்டு விட வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இங்கு குறைவு என்பதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டியதில்லை. அதே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தான் தேவை. ஆனால், தற்போது முககவசம் மற்றும் கையுறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், டாக்டர்களுக்கு கூட முகக்கவசம், கையுறை கிடைப்பதில்லை. இது போன்று முககவசத்தை பதுக்கி வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிகிச்ைச அளிக்கும் அனைத்து டாக்டர்களுக்கும் முக கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Ramalingam ,airports ,Corona ,Government Doctors Association Tamilnadu , Tamilnadu, Corona, Surveillance
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...