×

பயப்பட வேண்டாம் அலட்சியம் கூடாது: எம்.எம். காசிம், நோய் தொற்று குழந்தைகள் நல டாக்டர்

இந்தியாவில் பல இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, தேனி, திருவாரூர் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது என்பது சாத்தியமில்லை. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். அது மாதிரி தான் பரிசோதனை செய்ய முடியும். எல்லா விமான நிலையங்களிலும் தற்காலிகமாக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, பயணிகளிடம் சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்போது தான் கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எதற்காக வந்தது என்பது நமக்கு தெரிந்துள்ளது.

சீனாவிற்கு வரும் போது முதலில் இந்த பாதிப்பு குறித்து தெரியவில்லை. ஆனால், நமக்கு நன்றாக தெரிந்துள்ளது. இதனால், நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். மற்ற நாடுகளில் இது போன்று செய்யவில்லை. அதனால், நாம் பயப்பட தேவையில்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது டிவி, செல்போன், செய்தித்தாள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாமும் சில முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டியுள்ளது. நமக்கு அந்த அறிகுறிகள் வந்தாலோ அல்லது நமது உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வந்து இருந்தாலோ அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். மேலும், இந்த தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். போதுமான அளவுக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இதை, பின்பற்றினாலேயே போதும். அனைவரும் முககவசம் அணிய வேண்டியதில்லை. அப்படி ஒரு சூழல் இன்னும் இங்கு ஏற்படவில்லை. இப்போதைக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

ராஜஸ்தானில் கூட பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கூட ஆன்ட்டி வைரல் மருந்து தரப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இருப்பினும் இது தான் மருந்து என்று சொல்ல முடியாது. உலகம் முழுவதும் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. நமது அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தனி மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதாவது தனி மனித கட்டுப்பாடு வேண்டும். அதே நேரத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. பயப்பட வேண்டாம். இது போன்ற கொரோனா பாதிப்பு உள்ளவர்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். நமக்கு ஒரு பாதிப்பு வருகிறது என்ற போது உடனே நாம் மருத்துவமனையை அணுக வேண்டும். எல்லா வைரஸ் பாதிப்பு குழந்தைகள், முதியவர்களை மட்டும் பெரும்பாலும் பாதிக்கும். ஆனால், இந்த வைரஸ் பாதிப்பு அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இந்தியா மாதிரியான நாடுகளில் ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும். அப்போது தான் இந்த பாதிப்பில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Tags : Dr. ,Qasim ,Tamilnadu ,Corona , Tamilnadu, Corona, Surveillance
× RELATED டூர் போறீங்களா?