×

விமான நிலையத்தில் பயணிகளிடம் ஸ்கிரீனிங் டெஸ்ட் கட்டாயம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை  துறை ஆணையர்  ராதாகிருஷ்ணன்  உள்பட சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து எல்லை  பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்களில் சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு மூலம் தொடர்ந்து பயணிகளிடம் ஸ்கிரீனிங் சோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : passengers ,airport ,Health Secretary ,Corona , Corona, Health Secretary, Information
× RELATED டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின்...