×

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி எழுத்துத்தேர்வு: வெவ்வேறு தேதியில் நடக்குமா?: விண்ணப்பதாரர்கள் வலியுறுத்தல்

தர்மபுரி: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப, தற்போது 29 மாவட்டங்களில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது. தர்மபுரி நகர கூட்டுறவு வங்கிக்கான எழுத்து தேர்வு, மே 23ம் தேதியும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மே 24ம் தேதியும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. அதே மே 24ம் தேதி விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான, எழுத்து தேர்வும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. ஒரே தேதியில் பல மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. தற்போதுள்ள அறிவிப்பின் படி, ஏப்ரல் 5ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட வங்கி தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வும் நடைபெறுகிறது.  ஏப்ரல் 26ம் தேதி தேனி, விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களுக்கான கூட்டுறவு சங்க தேர்வும், மே 2ம் தேதி திண்டுக்கல், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வும், மே 3ம் தேதி திண்டுக்கல், திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்களுக்கான தேர்வும், மே 10ம் தேதி காஞ்சிபுரம், கடலூர் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்வும் நடக்கிறது.

 மே 17 காஞ்சி, கடலூர், சிவகங்கை மாவட்டங்களுக்கான கூட்டுறவு வங்கி தேர்வு, விழுப்புரம் கூட்டுறவு சங்க தேர்வு, நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்வு காலையிலும், மதியம் கூட்டுறவு வங்கி தேர்வும், குமாரி கூட்டுறவு சங்க தேர்வு காலையிலும், மதியம் கூட்டுறவு வங்கி தேர்வும், மே 31ம் தேதி தூத்துக்குடி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தேர்வும், நாகை கூட்டுறவு சங்கம் தேர்வும், ஜூன் 7ம் தேதி தஞ்சாவூர் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வும், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கான கூட்டுறவு சங்க தேர்வும், ஜூன் 13ம் தேதி திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர் மாவட்டங்களுக்கான கூட்டுறவு வங்கி தேர்வும், ஜூன் 14ம் தேதி வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், அரியலூர், மதுரை, கரூர் மாவட்டங்களுக்கான கூட்டுறவு சங்க தேர்வும், ஜூன் 28 ம் தேதி சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கான கூட்டுறவு சங்க தேர்வும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரே தேதியில், பல மாவட்ட வங்கி போட்டித் தேர்வை நடத்துவதால் எதில் பங்கேற்பது, எதை தவிர்ப்பது என இளைஞர்கள் கவலையடைந்துள்ளனர். சில மாவட்டங்களில் ஒரே நாளில் காலை, மதியம் என 2தேர்வுகளையும் வைத்துள்ளனர். எனவே, தேர்வு தேதிகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

37 பணியிடத்திற்கு 15,000 பேர் மனு
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள 37 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டது. 37 காலி பணியிடங்களுக்கு, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Applicants , Tamil Nadu , Co-operative , Bank
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...