×

மாநிலம் முழுவதும் சட்டவிரோத ஆலைகளுக்கு சீல்வைப்பு: தடையில்லா சான்று வழங்கக்கோரி 600 குடிநீர் ஆலைகள் விண்ணப்பம்

வேலூர்: தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தடையில்லா சான்று பெறாமல் இயங்கி வந்த கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் தடையில்லா சான்றிதழ் கேட்டு குடிநீர் கேன் நிறுவனத்தினர் தற்போது விண்ணப்பங்களை வழங்கி உள்ளனர். இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. குடிநீர் உரிமம் புதுப்பிக்க 50 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பொதுப்பணித்துறை சார்பில் நிலத்தடி நீர் எடுக்க ஆட்சேபனை இல்லை என்று தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்கப்படுகிறது. சட்டத்துக்கு உட்பட்டு நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் நிலத்தடி நீர் உரிமம் பெற அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அதிநுகர்வு பகுதி, அபாயகரமான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கிடையாது. அந்த இடத்தில் கேன் வாட்டர் குடிநீர் ஆலை தடையில்லா சான்று கேட்டால் வழங்கப்பட மாட்டாது. பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது அந்தந்த மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விரைவில் சான்றிதழ் வழங்கப்படும். அதுவரை அந்த ஆலைகள் செயல்படக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : plants ,Sealing ,state ,drinking water plants ,plant , Illegal plant, sealing, 600 drinking water plants, application
× RELATED பீட்ரூட் கீரை மசியல்