×

ஒரிஜினல் மதிப்பீடு சான்று கேட்டு 25 எம்சாண்ட் குவாரிகள் விண்ணப்பம்: வரும் 26ம் தேதி தொழில்நுட்ப வல்லுனர் குழு கூடுகிறது

சென்னை: மதிப்பீட்டு சான்று கேட்டு 25 எம்சாண்ட் குவாரிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 26ம் தேதி தொழில்நுட்ப வல்லுனர் குழு கூடுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், எம்சாண்ட் குவாரிகளில் தயாரிக்கப்படும் மணல் ஒரிஜினல் தானா என்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. அதாவது, விஎஸ்ஐ இயந்திரத்தை பயன்படுத்தாமலும், ஜல்லி தயாரிக்கப்படும் போது இயந்திரத்தில் இருந்து வரும் தேவையற்ற துகள்களையும் எம்சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள 1,200 எம்சாண்ட் குவாரிகளுக்கு தனித்தனியாக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பபட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள 245 எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தற்போது பொதுப்பணித்துறையில் மேலும் 25 குவாரிகள் மதிப்பீட்டு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. அந்த குவாரிகளில் பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த குவாரிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மணலை ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனையில் பெறப்பட்ட முடிவுகளை வைத்து பொதுப்பணித்துறை, ஐஐடி, அண்ணா பல்கலை, கட்டிட அமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை உட்பட 14 பேர் அடங்கிய வல்லுனர் குழு முன்பு வரும் 26ம் தேதி வைக்கப்படுகிறது. இந்த குழுவினர் குவாரிகளின் பதிவு சான்று, கனிம வளத்துறையின் அனுமதி உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் அந்த குழுவினர் முன்பு வைக்க வேண்டும். அந்த குழு சார்பில் அந்த சான்றுகளை ஆய்வு செய்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : technicians ,panel , 25 Essand quarries,application, proo,original assessment
× RELATED புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக...