×

கொரோனா பாதிப்பை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் பல  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கொள்ளை நோயாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள், தியேட்டர்கள், கல்லூரிகள் மூடல், பொது நிகழ்ச்சிகள் ரத்து என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அவற்றின் விவரம்:
* சனிக்கிழமைதோ றும் உச்சநீதிமன்ற வளாகத்தை, சுற்றுலா குழுக்கள் சுற்றி பார்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கபடுகிறது. உச்ச நீதிமன்ற அருங்காட்சியகமும் மூடப்படும்.
* நீதிமன்ற வளாகத்துக்குள் யாரும் தேவையில்லாமல் வரக்கூடாது.
* வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற ஆவணங்கள் விற்பனையாளர்கள் மாலை 5.30 மணிக்குள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். மற்ற இடங்களில் 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.
* நீதிமன்றத்துக்குள் வரும் வக்கீல்கள், மனுதாரர்கள், ஊழியர்கள் எந்த இடத்திலும் கூட்டமாக நிற்க கூடாது. தங்கள் வேலை முடிந்ததும் நீதிமன்ற வளாகத்தை விட்ட வெளியேற வேண்டும்.
* நீதிமன்ற வளாகத்துக்குள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக, இன்று உச்ச நீதிமன்றத்தின் 6 அமர்வுகள் மட்டுமே 12 அவசர வழக்குகளை விசாரிக்கும்.
* அனைத்து ஊழியர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபின்பே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
* நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீன்கள் மூடப்படும்.


Tags : Supreme Court , Restrictions, Supreme Court, Prevent,Corona Damage
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...