×

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் வாத்ரிகாமா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வீரர்கள் அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பி சுட்டனர்.  இதில் 4 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தளபதியான தாரிக் அகமது என தெரியவந்துள்ளது. மற்ற 3 பேரும் லஷ்கர் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என கூறப்படுகிறது.

Tags : terrorists , 4 terrorists ,shot ,dead
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை