×

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியரை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும்: உபி அரசுக்கு திகார் சிறை கடிதம்

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை  நிறைவேற்ற, தூக்கிலிடும் நபரை மூன்று நாள் முன்னதாக அனுப்புமாறு  உத்தரப் பிரதேச அரசை திகார் சிறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நிர்பயா  பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி  காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறை எண் 3ல் குற்றவாளிகள் நால்வரையும்  தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார்  நிலையில் வைத்துள்ளது.

எனினும், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி  தூக்குதண்டனையில் இருந்து 3 முறை தப்பித்த குற்றவாளிகள் முகேஷ் குமார்  சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்‌ஷய் குமார்  சிங்(31) ஆகியோர் வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து மரண  தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளனர். தண்டனைக்கு  இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சிறையில்  இருந்து அவர்களை தூக்கிலிட வரவுள்ள ஊழியர் பவன் ஜல்லாத் என்பவரை 3 நாள்  முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு, டெல்லி திகார் நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



Tags : convicts ,death ,Rahul , done, advance, Rahul teased
× RELATED பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற...