×

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு 4 காங். எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் ராஜினாமா

அகமதாபாத்: மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருந்து 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ கட்சி சார்பில் அபய் பரத்வாஜ், ரமீலா பாரா மற்றும் நர்காரி அமீன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பா.ஜ எம்.எல்.ஏ.க்களின் பலம் அடிப்படையில் இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடியும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மாறி வாக்களித்தால் மட்டுமே 3வது நபரை வெற்றி பெறச் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்கள் சக்திசிங் கோஹில் மற்றும் பாரத்சிங் சோலங்கி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 3வது எம்.பி.யை வெற்றி பெறச் செய்ய பா.ஜ  குதிரைப் பேரத்தில் ஈடுபடலாம் என கருதி, காங்கிரஸ் கட்சி 14 எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூர் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் நேற்று முன்தினம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். அவர்களது பெயர்களை சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பேன்’’ என்றார். இதன் மூலம் 182 உறுப்பினர்கள் உள்ள குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 73ல் இருந்து 69 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு எம்.பி இடத்தை பிடிப்பது தடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Tags : elections ,Kang ,Rajya Sabha ,Gujarat , 4 Kang , Rajya Sabha elections, MLAs , resign, Gujarat
× RELATED சில மாநிலங்களில் பாஜக...