×

காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். காஷ்மீரில், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி என்ற புதிய கட்சியை அல்தாப் புகாரி என்பவர் தொடங்கி உள்ளார். அவரது தலைமையில் கட்சியின் குழுவினர், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது, காஷ்மீர் பிரச்னைகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் பிரதமருடன் பேசினர். பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியுடன் காஷ்மீர் வளர்ச்சி குறித்து பேசினோம். அப்போது, காஷ்மீர் சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விரைவில் காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Modi ,Kashmir , Prime Minister Modi, assures, full state status , Kashmir
× RELATED சொல்லிட்டாங்க...