×

ட்வீட் கார்னர்

பல்கேரியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஸ்வெட்லனா பிரான்கோவா (32 வயது). 2010ம் ஆண்டு உலக தரவரிசையில் 31வது இடம் வரை முன்னேறி, முன்னணி வீராங்கனையாக முத்திரை பதித்தவர். அந்த ஆண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரை இறுதிக்கும் தகுதி பெற்று அசத்தி இருந்தார். 2014ம் ஆண்டு சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குழந்தை பெற்றுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த பிரான்கோவா, தற்போது மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள அவர், கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Tags : Tweet Corner , Tweet Corner
× RELATED ட்வீட் கார்னர்: போட்டாஸ் அசத்தல்!