×

கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் ரூ.74 கோடி வழங்கப்படும்; சார்க் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ்  உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்ற சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி பேச்சு:

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.74 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய பிரதமர் மோடி, முன்னோக்கிப் பார்க்கும்போது, நமது தெற்காசிய பிராந்தியத்தில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை ஒருங்கிணைக்க ஒரு பொதுவான ஆராய்ச்சி தளத்தை உருவாக்க முடியும். இதுபோன்ற ஒரு பயிற்சியை ஒருங்கிணைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவ முடியும் என்றார்.

சாத்தியமான வைரஸ் கேரியர்களையும் அவர்கள் தொடர்பு கொண்ட நபர்களையும் சிறப்பாகக் கண்டறிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு போர்ட்டலை அமைத்துள்ளோம். இந்த நோய் கண்காணிப்பு மென்பொருளை சார்க் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியாக இருக்கும். சோதனை கருவிகள் மற்றும் பிற உபகரணங்களுடன், இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் விரைவான மறுமொழி குழுவை நாங்கள் கூட்டி வருகிறோம். தேவைப்பட்டால், அவை உங்கள் வசம் தெரிவிக்கப்படலாம்.

எங்கள் மக்களுடன் உறவுகள் பழமையானவை, நமது சமூகங்கள் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாகச் செயல்பட வேண்டும், ஒன்றாக வெற்றி பெற வேண்டும் என்றார். பல்வேறு நாடுகளில் இருந்து 1,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம். சார்க் நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், நாம்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தாக்குதலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

தலைவர்கள் பங்கேற்பு:

காணொலி ஆலோசனையில் பூடான் பிரதமர் லொதே ஷெரிங், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகம்மத் சோலிஹ், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாபர் மிர்சா, சார்க் அமைப்பு நிர்வாகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான்,  மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : SAARC ,India ,leaders ,Modi , Rs. 74 crore will be given on behalf of India as emergency fund to prevent coronation; PM Modi announces meeting with SAARC leaders
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...