×

கொரோனா வைரஸ் எதிரொலி திருநள்ளாறு நளன் குளத்தில் குளிக்க தடை: பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் நீராடினர்

காரைக்கால்: கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்தில் தண்ணீர் இறைக்கப்பட்டதால், பக்தர்கள் பாட்டில், பிளாஸ்டிக் கப்புகளில் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு செல்கின்றனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில், நலவழித்துறை, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பக்தர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதித்தார். இந்நிலையில் நேற்று (14ம்தேதி) என்பதால், திருநள்ளாற்றில் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் கூடினர்.

பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் முன், வரிசை பகுதியில் சோப்பு மற்றும் நீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் முன் கைகளை சோப்பு போட்டு கழுவிவிட்டு உள்ளே நுழைய அனுமதிகப்பட்டது. சளி, இருமல் உள்ளவர்கள் கோயில் உள்ளே நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், சனிபகவானின் நளன் குளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் முதல் பக்தர்கள் கூட்டம் இருந்ததால், நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்காமல் இருக்க, நளன் குளத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் வைத்து இறைக்கப்பட்டது. இருந்தும், குளத்தில் கரைகளில் இருந்த சொற்ப நீரில், பல பக்தர்கள் இறங்கி குளித்தனர். பகல் 1 மணிக்கு மேல், தண்ணீர் முழுமையாக இறைக்கப்பட்டதால், குளத்தின் படிகட்டுகளில் இருந்த தண்ணீரை பக்தர்கள் பலர், பாட்டில், பிளாஸ்டிக் கப்புகளில் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிகொண்டு சென்றனர்.

Tags : bathing pool ,Tirunelveli ,Devotees , Coronavirus, Thirunallaru Nolani pool, ban, devotees
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...