×

கொரோனாவை தடுக்க சீனா செல்லும் காரியாபட்டி `மாஸ்க்’

காரியாபட்டி: காரியாபட்டியில் உற்பத்தியாகும் மாஸ்க், கொரோனா வைரஸைத் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டம் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், வேகமாக பரவி வரும் கொரோனாவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  எனவே, இதனை தடுக்க பொது இடங்களுக்கு செல்லும்போது முகத்தில் `மாஸ்க்’ அணிய வலியுறுத்தப்படுகிறது. இதனால் மாஸ்க் தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பெண்களை மட்டும் வைத்து தயாரிக்கப்படும் ‘மாஸ்க்’, இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை தயாரிக்கும் பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக துண்டு, சட்டை ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், தற்போது மாஸ்க் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். இதுகுறித்து உற்பத்தியாளர் திலகவதி கூறுகையியல், ``மதுரை போன்ற நகரங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் மாஸ்க் தயாரிக்க ஆர்டர் கிடைத்தது. ஐம்பதாயிரம் மாஸ்க் தயாரிக்க வேண்டியிருப்பதால் நிறைய பெண்கள் வீடுகளுக்கு வாங்கி சென்று தயாரித்து தருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மாஸ்க் இத்தாலி, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது’’ என்றார்.

Tags : Chinese ,Stop Corona , Corona, China, Cariapatti, Mask
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...