×

கோட்சே முதல் பவன் குப்தா வரை; இந்திய சிறைகளில் 378 தூக்கு கைதிகள்: 30 ஆண்டில் 16 பேருக்கு மட்டும் தூக்கு

டெல்லி: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 16 பேர் மட்டுமே தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் வரும் 20-ம் தேதி நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர்களை போலவே மேலும் 374 பேர் பல்வேறு  சிறைகளில் தூக்கு தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அரிதிலும் அரிதான குற்றங்களில் தூக்கு தண்டனை என்பது இந்தியாவில் உள்ள நடைமுறை. நாட்டுக்கு எதிரான சதி, பயங்கரவாத செயல்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விசாரணை நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கின்றன.

விஷம் கொடுத்தல், விச ஊசி போடுதல், மின்சாரம் பாய்ச்சுதல், பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்தல், துப்பாக்கியால் சுட்டு கொள்ளுதல் போன்றவை வெளிநாடுகளில் உள்ள மரண தண்டனை நிறைவேற்றும் முறை. ஆனால் நமது நாட்டில் ஆங்கிலேயர் காலத்து தூக்கிலிடுதலே இன்றும் பின்பற்றப்படுகின்றன. 1947-க்கு பின்னர் நாடு முழுவதும் 52 பேர் மட்டுமே தூக்கிலிடப்பட்டதாக அரசு பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய சட்ட ஆணைய குறிப்புகளில் 16 மாநிலங்களில் 1,422 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 3 ஆயிரம் முதல் 4,500 வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேச மாநில சபைகளில் அதிகப்படியானோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்கு பின்னர் முதன் முதலில் தூக்கில் போடப்பட்டவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே. கடைசியாக மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளி யாகூப்மேனன் 2015-ல் தூக்கிலிடப்பட்டார். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 16 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரும் 20-ம் தேதி நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தூக்கிலிடப்பட்ட உள்ளனர். மேலும் 374 பேர் தூக்கை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களில் தமிழக சிறைகளில் உள்ள 16 பேரும் அடங்குவர்.

Tags : jails ,hangings ,Pawan Gupta ,Kotche ,Indian , Gotse, Pawan Gupta, Indian Prison, Hanging Prisoners
× RELATED சென்னை புழல், வேலூர், திருச்சி...