×

கொரோனா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 100-ஐ தாண்டியுள்ள நிலையில் கொரோனா அச்சத்தால் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமான பயணம் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் நவீன சோதனை கருவிகள் மூலம் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரையில் இதே போல தீவிர பரிசோதனைக்கு பிறகே பயணிகள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை பன்னாட்டு முனையத்தை பொறுத்தவரையில் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசங்களை அணிந்த பிறகே பணியாற்றுகின்றனர். மேலும் அங்கு சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 5 நாட்களாகவே சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படக்கூடிய விமானங்கள்,

அதேபோல தாயலாந்து, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 6வது நாளாக இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : flights ,Chennai airport ,airport ,Chennai , Coronavirus, Chennai airport, flights canceled
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்