×

மாவட்ட சிலம்பம் எண்ணூர் முதலிடம்

திருவள்ளூர்: மாவட்ட அளவிலான சிலம்பாட்டக் குழு போட்டியில், எண்ணூர் அணி முதலிடம் பிடித்தது.திருவள்ளூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்டக் குழு போட்டி நடந்தது. சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட தலைவர் கமாண்டோ பாஸ்கர் முன்னிலையில், போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தொடங்கி வைத்தார்.இந்தப் போட்டியில் தாலுகா வாரியாக அணிகள் பங்கேற்றன. அதில் எண்ணூர் அணி முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் 2, 3வது இடங்களை முறையே பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய அணிகள் கைப்பற்றின. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, வருவாய் அலுவலர் திவ்யா ஆகிய இருவரும் பரிசுகள் வழங்கினர். சிலம்பாட்டக் கழக மாவட்ட நிர்வாகிகள் முருககனி, ராஜா நேசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Tags : District ,Chilambam Nunoor ,District Silambam Nunoor , District,Silambam Nunoor ,tops , list
× RELATED ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம்...