×

வண்ணாரப்பேட்டையில் இன்று முஸ்லிம்கள் மீண்டும் ஒன்று கூடல் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்துக்கு காரணமாக விளங்கும் வண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் 3 மாவட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து வண்ணார்பேட்டை போராட்டக்குழு சார்பில் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:சென்னை வண்ணார்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரியும், அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் தான் அரசுக்கு மிக பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது. மேலும் தமிழக முழுவதும் போராட்டங்களுக்கு வண்ணார்பேட்டை மிக பெரிய முன் உதாரணமாக இருந்து வருகிறது.

இதனால், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி வண்ணார்பேட்டை களத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடுவோம். அரசுக்கு ஒட்டு மொத்த எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கூறப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தை கலைக்க அதிகாரிகள் தடியடி நடத்தியதற்கு பின்னர்தான் மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அரசு இதுவரை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், தற்போது வண்ணாரப்பேட்டையில் மீண்டும் ஒன்று கூடல் போராட்டம் நடைபெற இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Washermenpet ,Muslims , Muslims gather ,again today, Washermenpet
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை