×

ஸ்ரீஹரிகோட்டாவில் ஊழியர்களுக்கு விடுமுறை: ராக்கெட் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைப்பேட்டைக்கு வந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நெல்லூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லூர் மாவட்டத்தில் இயங்கும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயோமெட்ரிக் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vacation ,Sriharikota ,holiday vacation , Vacation ,employees ,Hurikota, Rocket production suspended
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம்