×

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட மிகவும் குறைவாக காணப்பட்டது. இதனால் ₹300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்குள்ளும்,  ஆதார் மூலம் சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில்  பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களும்  இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது பக்தர்கள் தங்கும் அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு கைரேகை பதிவு செய்கின்றனர். எனவே, ஒவ்வொரு பக்தரும் கைரேகையை பதிவு செய்தபின்னர் கிருமிநாசியினால் இயந்திரத்தை துடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : devotees ,crowds ,Tirupati , crowds, devotees ,Tirupati ,reduced
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை