×

புற்றுநோய் மையத்தில் சிறப்பு மையம் அமைக்க சன் டி.வி. ரூ.95.46 லட்சம் நிதி உதவி

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மையம் அமைக்க சன் டி.வி. ₹95 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், இளைஞர் நலன், கல்வி நிலையங்களில் கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடையாறு புற்றுநோய் மையத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க சன் டி.வி. 95 லட்சத்து 46 ஆயிரத்து 574 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.  

இதற்கான காசோலையை, அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தாவிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஏழை எளியோருக்கு தரமான மருத்துவ சிகிச்சை, சுகாதார மேம்பாடு, கல்வி நிலையங்களில் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை ₹112 கோடி  நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sun TV , Sun TV,special center,r cancer ₹ 95.46 lakh financial, assistance
× RELATED கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 35,000 ஏழைகளுக்கு சன் டி.வி. நிவாரண உதவி