×

மோடி திட்டத்துக்கு பாகிஸ்தான் சம்மதம்

பிரதமர் மோடி சில  தினங்களுக்கு முன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  ‘கொரோனா வைரசை எதிர்த்து போராட அரசும், மக்களும் முடிந்தளவு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். உலக மக்கள் தொகையில் அதிகளவிலான மக்கள் தெற்கு ஆசியாவில்தான் உள்ளனர். அவர்களின் சுகாதாரத்தை நாம் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இதற்கான யுக்தி குறித்து சார்க் நாடுகள் வீடியோ கருத்தரங்கு மூலம் ஆலோசிக்கலாம் என விரும்புகிறேன். உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கலாம்,’ என கூறியிருந்தார். இதற்கு சார்க் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகளும் சம்மதம் தெரிவித்து விட்டன. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா வைரஸ் குறித்து ஆலோசிக்கவும், அண்டை நாடுகளுக்கு உதவுவதில் ஒத்துழைப்புடன் செயல்படவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது,’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று மாலை 5 மணிக்கு சார்க் நாடுகளின் தலைவர் களுடன் பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தஉள்ளார்.

Tags : Pakistan ,Modi , Pakistan agrees , Modi's plan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...