×

சூப்பர் டிவிஷன் ஹாக்கி: சாய்-போலீஸ் டிரா

சென்னை: சூப்பர் டிவிஷன் ஹாக்கி போட்டியில்  சாய்-சென்னை போலீஸ் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.சென்னையில் சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடைபெறும் இந்த தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. பி பிரிவில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) - சென்னை போலீஸ் அணிகள் நேற்று மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிப்பதில் முனைப்புக் காட்டியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.அதற்கேற்ப அடுத்தடுத்து கோல்கள் விழுந்தன. முதல் பாதியில் சென்னை போலீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது பாதியில் சாய் அணி ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. சென்னை போலீஸ் அணியின்  கார்த்தி, டேவிட் ஆரோக்யராஜ், சாய் அணியின் மணிகண்டன், அரவிந்தராஜன் தலா ஒரு கோல் அடித்தனர்.Tags : Chai-Police Draw , Super Division,Hockey, Chai-Police Draw
× RELATED உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ்:...