×

ஐஎஸ்எல் கால்பந்து 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான பைனலில் சென்னையின் எப்சி அணியுடன் மோதிய கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டது.அந்த அணியின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் 10வது, 90வது நிமிடத்திலும், எடு கார்சியா 48வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னையின் எப்சி சார்பில் வல்ஸ்கிஸ் 69வது நிமிடத்தில் கோல் போட்டார். ஏற்கனவே 2014, 2016ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா அணி3வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது. 2015 மற்றும் 2018ல் பட்டம் வென்ற சென்னையின் எப்சி அணி இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்டேடியத்தில் நேற்று ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Tags : ISL Football ,Kolkata , ISL Football, 3rd time,Kolkata champion
× RELATED மானாமதுரையில் கொல்கத்தாவில் இருந்து...