×

வீட்டில் இருந்தபடி வேலை 4000 ஊழியர்கள் ஆபீஸ் வர தடை: யுனிலீவர் அறிவிப்பு

மும்பை,: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் கம்பெனி தனது அலுவலக ஊழியர்கள் 4,000 பேரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்துவரும் முன்னணி நிறுவனங்களில் யுனிலிவர் லிமிடெட் நிறுவனமும் ஒன்று. இது தனது பொருட்களை 190 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. கம்பெனியின் இந்திய பிரிவான இந்துஸ்தான் யுனிலிவர் கம்பெனியில் சுமார் 18,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 85 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துபோனார்கள். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக யுனிலிவர் நிறுவனம் தனது அலுவலகங்களில் வேலை செய்து வரும் 4,000 ஊழியர்களை வரும் மார்ச் 17ம் தேதியில் இருந்து அவர்களுடைய வீடுகளில் இருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேத்தா இது குறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதையடுத்து ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு அம்சமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் திட்டத்தை மார்ச் 17ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளோம். இதனால் ஊழியர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இந்த நோயில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்” என்றார்.

Tags : home ,Unilever , Unilever announces, ban , 4000 employees ,home
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...