×

இரு பட்ஜெட் கார்களை களம் இறக்கும் மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை தக்கவைத்துள்ளது. இந்த சூழலில், இரண்டு புதிய பட்ஜெட் கார் மாடல்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. மாருதியின் புதிய பட்ஜெட் கார்கள் YOM மற்றும் YNC ஆகிய குறியீட்டு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இந்த கார்கள் ரூ.5 லட்சம் பட்ஜெட்டுக்குள் உருவாக்கப்படுகின்றன. இப்புதிய கார்களில் YOM என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வரும் கார் ஆல்ட்டோ 800 சிசி மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இப்புதிய மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்து, YNC என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் மாடலானது செலிரியோ காருக்கு மாற்றாக வர இருக்கிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படும். மாருதியின் புதிய YNC கார் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எஸ்யூவி ரக கார்கள் மீதான மோகம் காரணமாக, பட்ஜெட் வகை ஹேட்ச்பேக் கார்களுக்கான மவுசு குறைந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனையான கார்களில் 25 சதவீதம் அளவுக்கு சிறிய வகை பட்ஜெட் கார்கள் பங்களிப்பு இருந்தன. ஆனால், தற்போது இது தற்போது வெறும் 8 சதவீதமாக குறைந்துவிட்டது.

இருப்பினும், இந்த வகை கார் மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு இருப்பதால், ஆல்ட்டோ, செலிரியோ கார்களுக்கு மாற்றாக புதிய கார்களை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது. எஸ்யூவி ரக கார்கள் மற்றும் விலை உயர்ந்த கார்களுக்கான வரவேற்பு அதிகரித்தபோதிலும், ஊரக பகுதிகளில் சிறிய வகை பட்ஜெட் கார்களுக்கான சந்தை வலுவாக இருப்பதாக மாருதி கருதுகிறது. எனவே, அந்த சந்தையை நோக்கி தனது வர்த்தகத்தை கொண்டு செல்ல மாருதி முயல்கிறது. புதிய மாசு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வந்தாலும்கூட வாடிக்கையாளர்களுக்கு மிகச்சரியான விலையில் கார்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாருதி சுஸுகி காய் நகர்த்தி வருகிறது. இவ்விரு புதிய கார்கள் களம் இறங்கிய பிறகு, ஆல்ட்டோ, செலிரியோ கார்களின் உற்பத்தி நீடிக்குமா? என தெரியவில்லை.

Tags : Maruti Suzuki , Maruti Suzuki, unveil, two budget, cars
× RELATED வர்த்தகம் தொடங்கியபோது சரிவில்...