×

கொரோனா வைரஸ் எதிரொலி எல்கேஜி, யுகேஜிக்கு விடுமுறை உண்டா? இல்லையா?: பெற்றோரை குழப்பிய ஆட்சியாளர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்

சென்னை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையை நிறுத்தி வைத்து  பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இதே பள்ளிக் கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் நேற்று அளித்த பேட்டியில் விடுமுறை ரத்து இல்லை என்று அறிவித்துள்ளது பெற்றோரிகளிடம்  குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில்  உள்ள மழலையர் வகுப்புகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி), கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர்,  கோவை, நீலகிரி மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரையும் மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வி துறை ஆஐணயர்  சி.ஜி.தாமஸ் வைத்யன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், விடுமுறை தொடர்பாக வெளியான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும், மறு  உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை  ஆணையர் சி.ஜிதாமஸ் வைத்யன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மழலையர் வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வரும் 16ம் தேதி முதலமைச்சர் வெளியிடும் முன்னர், சுற்றறிக்கை விவரம்  வெளியானதால் ஆணையரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விடுமுறை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரும் 16ம் தேதி (திங்கள்) அனைத்து மழலையர் வகுப்புகளில் பயிலும் மழலையர்கள், மற்றும்  கேரள எல்லையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த முக்கிய  அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (திங்கள்) வெளியிடுவார்” என்றார்.

திணறும் ஆட்சியாளர்கள்
பள்ளிக் கல்வித்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக யூகேஜி, எல்கேஜி வரை உள்ள வகுப்புகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே பள்ளிக் கல்வித்துறை சார்பில் விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்  வெளியிடப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டியின்போது, ‘‘எல்கேஜி, யுகேஜி  வகுப்புகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது நிறுத்தி வைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். இப்படி பள்ளி கல்வித்துறை ஒரு நாள்  விடுமுறை என்றும் மறு நாள் இல்லை என்றும் குழப்பிய நிலையில், அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் கூறுவார் என்று நழுவிக்  கொண்டு பெற்றோர்களை மேலும் குழப்பிவிட்டார். இறுதியாக முதல்வர் பள்ளிகளுக்கு 15 நாள் விடுமுறை ரத்து இல்லை என்று கூறி நீண்ட  குழப்பத்துக்கு முடிவு கட்டி உள்ளார். ஒரு சாதாரண விஷயத்தை அறிவிப்பதில் கூட இவ்வளவு திணறலா என்று பெற்றோர் திட்டி தீர்த்ததுதான்  ேநற்று கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : rulers ,LKG ,Corona ,parents ,school education officials , Corona virus, EKG, UKG ,holiday,
× RELATED கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே 37 பேர்...