×

மின்கட்டண மானியமாக 8,034.77 கோடி ஒதுக்கீடு

சென்னை: மின்கட்டண மானியமாக 2019-20ம் நிதி ஆண்டில் ரூ.8,034.77 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நடவடிக்கை  எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் வீடு மின்இணைப்பு-2 கோடி, வணிகம்-36 லட்சம், தொழிற்சாலை-7 லட்சம், விவசாயம்-21 லட்சம், குடிசைகள்-11 லட்சம் என  மொத்தம் 3 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தயாரித்து வழங்கி வருகிறது.

மேலும் ஒவ்வொரு பகுதியை ஆங்காங்குள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயத்திற்கு  வழங்கப்படும் மின்இணைப்பு கட்டணம் கிடையாது. வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதேபோல் 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வாரியத்திற்கும் ஏற்படும் செலவு  தொகையை, அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2019-2020ம் நிதி ஆண்டில் (பிப்ரவரி 10ம் தேதி வரை) 8,034.77 கோடியை அரசு  வழங்கியுள்ளது.


Tags : 8,034.77 crore, subsidy, bill
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...