×

வெடிகுண்டு வீசிய சம்பவம் கோர்ட்டில் சென்னை ஆசாமி சரண்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவன் சிடி மணி(எ)மணிகண்டன்(35). அதேபோல் வடசென்னையை தனது  கட்டுப்பட்டில் வைத்துள்ள பிராட்வே வள்ளுவர் நகரை சேர்ந்தவன் காக்கா தோப்பு பாலாஜி (39). கடந்த 3ம் தேதி சிடி.மணி ஜார்ஜ் டவுன்  நீதிமன்றத்திற்கும், காக்கா தோப்பு பாலாஜி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு  விசாரணை முடிந்தவுடன் சிடி மணி தனது சொகுசு காரில் காக்கா தோப்பு பாலாஜியை ஏற்றி கொண்டு தேனாம்பேட்டை நோக்கி வந்தான். அப்போது  கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் சிடி.மணி கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் இருந்து அவர்கள் தப்பி வேறொரு காரில் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேனாம்ேபட்டை போலீசார் சம்பவ  இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே மதுரையில் 4 பேரும்,  தென்காசியில் 3 பேரும் சரணடைந்தனர். இந்நிலையில் நேற்று சதீஷ் (20) என்பவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Tags : Madras Assam Charan ,Bombshell incident ,Court Asami Charan ,Madras , Bombshell ,incident Madras, Court, Asami Charan
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...