×

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பிரேமலதா பதில்

சென்னை: மாநிலங்களவையில் எம்பி சீட் கிடைக்காதது ஏமாற்றமல்ல. அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா கூறினார்.சென்னை கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் தேமுதிக பிரமுகர் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் கட்சி பொருளாளர் பிரேமலதா  கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலங்களவை எம்பி பதவி வேண்டும் என்று தேமுதிக மட்டும் கேட்கவில்லை. ஏ.சி.சண்முகம், பாஜக உள்ளிட்டோரும் கேட்டனர். அதிமுகவில்  பலரும் கேட்டனர். இன்னும் நாங்கள் எம்பி கணக்கு தொடங்கவில்லை. மிகப்பெரிய எண்ணிக்கையில் எம்பி கணக்கை தேமுதிக தொடங்கும்.  மாநிலங்களவையில் எம்பி சீட் கிடைக்காதது ஏமாற்றமல்ல.

அதிமுகவில் பலருக்கு ஏமாற்றம்தான். ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டார். ஊடகங்கள்தான் இதுபற்றி பேசி  பெரிதாக்குகின்றன. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். விஜயகாந்த் பிரசாரம் தொடங்குவார்.
அதில் தேமுதிக பெரிய வெற்றிபெறும். விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தொண்டர்கள்  நான் வரவேண்டும் என்றும் அழைக்கிறார்கள். விஜய் பிரபாகரன் வரவேண்டும் என்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்து  வருகிறோம்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.இதில், காஞ்சி மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் கராத்தே கோபிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Alliance ,AIADMK , AIADMK,coalition, Premalatha,
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...