×

சென்னை நகைக்கடைக்காரரிடம் ஓடும் ரயிலில் 1.50 கோடி தங்க நகைகள் திருட்டு: எல்லைப்பிரச்னையால் 10 மாதத்திற்கு பிறகு ஜோலார்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு

ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நகைக்கடைக்காரரிடம் 1.50 கோடி மதிப்பிலான சுமார் 5 கிலோ தங்க நகைகள்  திருட்டு போனது. எல்லை பிரச்னையால் 10 மாதங்களுக்கு பிறகு ஜோலார்பேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சஞ்ஜய் ஜெயின். இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி  சென்னையிலிருந்து பெங்களூருக்கு, பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது அதிகாலை 2 மணி அளவில்  எழுந்து பார்த்தார். அப்போது அவர் ைவத்திருந்த பை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் 1.50 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்க  நகைகள் இருந்ததாம்.

 இதுகுறித்து பெங்களூரு ரயில்வே காவல் நிலையத்தில் சஞ்ஜய் ஜெயின் புகார் அளித்தார். அவர்கள் சம்பவ இடம் காட்பாடி ரயில் நிலையம்  என்பதால் வழக்கை சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பினர். பின்னர், அங்கிருந்து இந்த வழக்கு காட்பாடி ரயில்  நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் காட்பாடி ரயில் நிலைய போலீசார், சம்பவ இடம் காட்பாடிக்கும்- லத்தேரி ரயில் நிலையத்திற்கும் இடையே  நடந்துள்ளதால் இந்த வழக்கை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து 10 மாதங்களுக்கு பிறகு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

Tags : jewelery ,jeweler ,Jolarpet ,Chennai ,Frontier , Tolery ,theft, , frontier , Jolarpet police case
× RELATED சென்னையில் நகை பட்டறையில் 118 சவரன்...