×

பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் வாக்குமூலம்

மேட்டூர்: கொளத்தூரில் கலப்பு திருமணம் செய்ததால், உறவினர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி தான் பெற்றோருடன் செல்லவே  விரும்புவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது..ஈரோடு மாவட்டம், குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்  ஜெகநாதன். இவரது மகள் இளமதி(23), பவானியில் உள்ள கேஸ் ஏஜென்சியில்  பணிபுரிந்து வந்தார். இவரும், பவானி கவுந்தப்பாடியை சேர்ந்த  நூற்பாலை தொழிலாளி செல்வனும் காதலித்து வந்தனர்.  கடந்த 9ம் தேதி இரவு  இளமதியும், செல்வமும், மேட்டூர் அருகே கொளத்தூர் வந்து, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புச்  செயலாளர் ஈஸ்வரனிடம் தஞ்சமடைந்தனர்.  இருவருக்கும் அவர் சாதி  மறுப்பு திருமணம் செய்து வைத்தார். தகவல் அறிந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன் மற்றும் உறவினர்கள், ஈஸ்வரனை  தாக்கி இளமதியை மீட்டு சென்றனர். அவர்கள் கடத்தி சென்ற ஈஸ்வரன், செல்வம் ஆகியோரை ேபாலீசார் மீட்டனர். அவரக்ள் கொடுத்த புகாரின்  பேரில்,  50 பேர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து, இளமதியின் தந்தை ஜெகநாதன் உட்பட 18 பேரை கைது செய்தனர். இதனிடையே,  செல்வம் தனது காதல் மனைவியை மீட்டு தரவேண்டும் என  புகார் கூறியிருந்தார்.  

அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கடந்த 4 நாட்களாக இளமதியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல், மேட்டூர் அனைத்து  மகளிர் காவல்  நிலையத்தில் இளமதி தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். அவரிடம், மேட்டூர் டிஎஸ்பி சௌந்தர்ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர்  தொல்காப்பியன் ஆகியோர்  விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் யாராலும் கடத்தப்படவில்லை. யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை.  பெற்றோருடன் சென்று வாழவே விரும்புகிறேன் என வாக்குமூலம் அளித்தார். தையடுத்து, இளமதியை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி  வைத்தனர். இதனால், காதல் மனைவி கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்த செல்வம் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.



Tags : parents ,teen , parents, Mixed ,marriages, Adolescent ,Confession
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது