×

காவலில் இருந்து வெளியே வந்ததும் மகனை பார்த்த பரூக்கின் பாசம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா  முப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.அதன் பிறகு, முதல் கட்டமாக பரூக் அப்துல்லாவை கடந்த செப்டம்பர் 15ம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் அரசு கைது செய்தது.  பின்னர், இது டிசம்பர் 13, மார்ச் 11 என இருமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் மீதான பிஎஸ்ஏ.வை ரத்து செய்வதாக அறிவித்த யூனியன் பிரதேச உள்துறை செயலர் நேற்று முன்தினம் அவரை விடுவித்தார்.  இதனைத் தொடர்ந்து, அவர் நகர் கிளைச் சிறையில் இருக்கும் தனது மகன் உமர் அப்துல்லாவை சந்திக்க கோரினார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் உமரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பு மிகவும்  உருக்கமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : Farooq ,Farook , custody,son, Farook's ,affection
× RELATED உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா...