×

நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதி ரத்து

புதுடெல்லி: பார்வையாளர் அனுமதி ரத்து தொடர்பாக மக்களவை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பீதி  காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த ரத்து  நடைமுறையில் இருக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் நாடாளுமன்றத்துக்குள் சுற்றிப் பார்க்கவோ அல்லது பார்வையாளர் அனுமதி பெறவோ  எம்.பி.க்கள் யாரும் பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Parliament ,Viewer , Parliament, Viewer, Cancel ,
× RELATED ஊழியருக்கு கொரோனா நாடாளுமன்ற கட்டிடத்தின் 2 தளங்கள் சீல்